சென்னை:
பாஜக கூட்டத்தினரிடையே புகுந்த இஸ்லாமிய இளைஞர், பெட்ரோல் குண்டுடன் வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது.
சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தமிழிசை சவுந்தர ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய பாரதிய ஜனதா செயலாளர் எச்.ராஜா உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இவர்களை கைது செய்த காவல்துறை வேப்பேரி, நுங்கம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபம், சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர்.
வேப்பேரியில் உள்ள மண்டபத்தில் மாலை ஐந்து மணியளவில் மண்டபத்தின் உள்ளே இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள், பெட்ரோல் குண்டுகளூடன் நுழைந்தனர். அவர்களில் ஒரு இளைஞர் பெட்ரோல் குண்டை பாஜகவினர் மீது வீச முற்பட்டபோது, தொண்டர்கள் பாய்ந்து வந்து அந்த இளைஞரை பிடித்துக்கொண்டனர். மற்ற மூவர் தப்பி ஓடிவிட்டனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
Patrikai.com official YouTube Channel