டில்லி:

கடந்த 2014ம் ஆண்டு பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பாஜக.வுக்கு ஆதரவு அமோகமாக இருந்து வந்தது. கடந்த சில வாரங்களாக இந்த ஆதரவு சரிவை நோக்கி திரும்பியுள்ளது. இதற்கு உதாரணமாக கடந்த மாதம் அகமதாபாத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் சமூக வலை தளங்களில் பாஜக.வுக்கு எதிராக பிரச்சாரம் நடந்து வருவதாகவும், அதை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அமித்ஷா பேசினார்.

ஆனால், வழக்கம் போல் இந்த எதிர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது. காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் ஆன்லைனில் தொடர்ந்து பாஜக.வுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 2 மாதங்களில் ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கத்தை ஒரு மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். இதன் மூலம் சமூக வலை தளத்தில் காங்கிரஸ் வளர்ந்து வருவதாக கருத்துக்கள் எழு ந்துள்ளது.

இது குறித்து சமூக வலை தள பயன்பாட்டாளர் அஜெந்திர திரிபாதி கூறுகையில், ‘‘அமைச்சர்களின் டுவிட்களுக்கு சமீப காலமாக எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவர்களை பாராட்டி டுவிட் செய்பவர்களையும் விமர்சனம் செய்வது அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 14ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலான கால க்கட்டத்தில் இதை காண முடிந்தது’’ என்றார்.

60 ஆயிரம் டுவிட்டுகளில் பிரதமருக்கு எதிராக சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 18 பேர் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 11 பேர் அருண்ஜெட்லி எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். சமூக வலைதளத்தின் அதிகப்படியான ஆதாயங்கள் காங்கிரஸ் கட்சியினர் குஜராத்தில் நடத்தும் பிரச்சாரத்திற்கு கிடைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சைபர் செல் தலைவர் ரோகன் குப்தா கூறுகையில், ‘‘ சமூக வலை தளங்களில் வரும் தகவல்களை சேகரிக்க 24 மணிநேரமும் 45 பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் மீமிஸ், வைரல் வீடியோக்களை கையாளுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் ஆதரவுகள் அனைத்தும் உண்மையானதாகவும், கட்சியினர் தவிர உண்மையான மக்கள், கணக்குகளை கையாளும் உண்மையான நபர்கள் தான் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாஜக.வினர் தங்களுக்கு எற்படும் எதிர்ப்புகளை சொந்த பிரச்சாரத்தின் மூலம் எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு குஜராத்தை முன்மாதிரி மாநிலம் என தெரிவித்து பிரச்சாரம் செய்த நிலை மாறி தற்போது மேம்பாட்டு திட்டங்கள் குறித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். சமூக வலை தளங்களில் மோடியை பின் தொடர்பவர்களில் 10ல் ஒரு பங்கு தான் ராகுல்காந்தியை பின் தொடர்கின்றனர்.

பாஜக தகவல் தொழில்நுடப் பிரிவின் ஜாம்பவான் அமித் மால்வியா கூறுகையில், ‘‘கடந்த 2 ஆண்டுகளில் கட்சியின் பேஸ்புக்கு பின் தொடர்பாளர்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்து, 7 மில்லியனில் இருந்து 13 மில்லியனாக உயர்ந்துள்ளது. 7 மில்லியன் பேர் டுவிட்டரில் பின் தொடர்கின்றனர்.

சமூக வலை தளத்தில் பாஜக மேற்கொள்ளும் பிரச்சாரம் அதிகப்படியான மக்களை சென்றடைகிறது. இதனால் எதிர்கட்சிகளின் எதிர்மறையான பிரச்சாரம் எடுபடாமல் போய்விட்டது. எங்களது நேர்மறையான, உண்மை அடிப்படையிலான பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நிர்வாகத்தில் ஏற்பட்ட முடக்கத்திற்காக முதல்வர் விஜய் ரூபனி மற்றும் அரசையும் ராகுல்காந்தி நேரடியாக தாக்கி பேசியுள்ளார். இந்த போட்டியை சமாளிக்க அருண்ஜெட்லி, நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை அனுப்ப பாஜக தயக்கம் காட்டி வருகிறது. குஜராத் பாஜக தலைவர்கள் எப்படி சமூக வளை தளத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்பதை கருத்தரங்கம் நடத்தி விளக்கியது. இதில் முதல்வர் ரூபணியும் கலந்துகொண்டார்.

குஜராத் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சமூக வலை தளத்தில் கவனம் செலுத்துமாறு ஐடி பிரிவு அறிவுறுத்தியுள்ளது. சுற்றுசூழல் பாதுகாப்பு, தூய்மை, சர்சைக்குறிய கருத்தக்களை கவனிக்குமாறு தெரிவி க்கப்பட்டுள்ளது. இதே நிலையை எதிர்கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன. விலைவாசி உயர்வு, பசு பாதுகாப்பு வன்முறை, ஜிஎஸ்டி போன்றவற்றுக்கு பாஜக தலைவர்கள் பதில் கூற வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது.