மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக எட்டில் ஐந்து இடங்களை காங்கிரசிடம் பறிகொடுத்திருக்கிறது. இது மத்திய அரசின் நோட்டுத்தடை நடவடிக்கையால் ஏற்பட்ட பின்விளைவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் அதிருப்தியை தேர்தலில் பிரதிபலித்திருக்கிறார்கள் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாண்ட்சாவ்ர், செஹூர், ஷகஞ்ச் ஆகிய இடங்களை மட்டும் பாஜக தக்கவைத்துள்ளது. மாநில பாஜக தலைவர் நந்தகுமார் சிங் சவுகான் மக்களின் தீர்ப்பை ஏற்போம், தொடர்ந்து மக்களுக்கு சேவை புரிவோம் என்று அறிவித்துள்ளார். மோடி அரசின் பொய் வாக்குறுதிகளால் மக்கள் நொந்துபோயிருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கேகே மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
BJP loses five of eight urban civic bodies to Congress in Madhya Pradesh