நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

2019ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் வாக்கு பதிவு கடந்த மாதம் 7ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக, சிவசேனா, ஜனதா தளம், என்.ஆர் காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜகவை எதிர்த்து களம் காணும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியுள்ளன.

வாக்குப்பதிவுகள் கடந்த 19ம் தேதி நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 10.25 மணி நிலவரப்படி,

தேசிய ஜனநாயக கூட்டணி: 321 தொகுதிகள்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி: 111 தொகுதிகள்

இதர: 109 தொகுதிகள்

இவ்வாறு முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.