பீகார்:
பா.ஜ.க. தலைவரின் கார் மோதி 9 மாணவர்கள் பலியான சம்பவம் பீகார் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் முஷாபர்பூர் மாவட்டத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பிய பள்ளி மாணவர்கள் மீது கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் 9 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியானார்கள்.   உயிரிழந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் 8 முதல் 10 வயதுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தில் 20 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அங்குள்ளமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகிறார்கள்.

பீகார் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மாணவர்கள் மீது மோதியது பாஜக தலைவர் ஒருவரின் கார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

[youtube-feed feed=1]