பா.ஜ.கவினர் எப்போதுமே ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள் – கனிமொழி எம்.பி

Must read

தூத்துக்குடி:
பா.ஜ.கவினர் எப்போதுமே ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள் என்று கனிமொழி எம்.பி கடுமையாக சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளியே ஒன்றும், உள்ளே ஒன்றும் என ஒவ்வொரு இடத்துக்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொரு நிலைப்பாடு எடுப்பதால் பா.ஜ.க-வினரிடம்நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

இதே பிரதமர், குஜராத்தில் முதல்வராக இருந்தபோது மாநில உரிமைகள் குறித்து பேசினார் என்றும், ஆனால், இன்று ஒவ்வொரு மசோதாவிலும் மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது என்றும் குற்றம் சாட்டிய அவர், இதுதான் அவர்களின் உண்மையான முகம் என்று தெரிவித்தார்.

More articles

Latest article