டில்லி

திர்க்கட்சி எம் எல் எக்களை கவர்ந்து இழுக்கும் ஒரு மோசமான வைரசைப் பாஜக பரப்புவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறி உள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பாஜக அக்கட்சிகளில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களை தன் பக்கம் இழுத்து பாஜக ஆட்சியைக் கலைத்து வருகிறது.    இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜக மீது அதிருப்தியுடன் உள்ளது.  தற்போது பாஜக தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும் அதே வேலையை செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

வரும் 19 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தேர்தல் நடைபெற உள்ளது.  குஜராத் மாநில ஆளும் கட்சியான பாஜக இருவரையும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இருவரையும் போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.   தற்போது குஜராத்தில் அடுத்து அடுத்து 3 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான கபில் சிபல் இது குறித்து, “’சுயசார்பு’ என பாஜக கூறி வருவது நாட்டுக்கு இல்லை.  மாறாக கட்சிக்கு மட்டுமே ஆகும்.  பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் பாஜக ஏராளமான பணத்தைச் சம்பாதித்துள்ளது.

இப்போது அதைக் கொண்டு நாடெங்கும் எதிர்க்கட்சிகளில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறது,  இவ்வாறு மாற்றுக் கட்சி உறுப்பினரகளை கவர்ந்து இழுக்கும் ஒரு மோசமான வைரசைப் பாஜக பரப்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.