டில்லி
டில்லியில் உள்ள அசோகா ஓட்டலை 60 ஆண்டுகளுக்குத் தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய பாஜக அரசு முடிவு எடுத்துள்ளது.
டில்லி நகரின் மையப்பகுதியில் தூதரக அலுவலகங்கள் அதிகம் உள்ள இடத்தில் அமைந்துள்ள அசோகா ஹோட்டல். 500க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்டதாகும். இது 1956-ல் அப்போதைய பிரதமர் நேருவின் ஆலோசனைப்படி கட்டப்பட்டு இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் (ஐடிடிசி) கட்டுப் பாட்டில் உள்ளது. அசோகா ஹோட்ட லில் உள்ள தரை விரிப்புகள் மற்றும் மரச் சாமான்களைப் புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.400கோடி முதல் ரூ.500 கோடி வரைசெலவாகும் என மதிப்பிடப்பட் டுள்ளது.
நிதி அயோக் இவ்வாறு பல கோடி ரூபாய் செலவிடுவதைவிடக் குத்தகைக்கு விட்டு வருவாய் ஈட்டுவது சிறந்ததாக இருக்கும் எனப் பரிந்துரைத்தது. அதன்படி, அசோகா ஹோட்டலை குத்தகைக்கு விடுவது என்றும் பயன்பாட்டில் இல்லாத காலி இடத்தை குத்தகை அடிப்படையில் ஹோட்டல் அல்லது சர்வீஸ் அபார்ட்மென்ட் கட்ட அனுமதி அளிக்க பாஜக அரசு முடிவு செய்தது.
இவ்வாறு குத்தகைக்கு விடும் முடிவு விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. இதில் 2 தனித்தனி இடங்களில் உள்ள காலி இடங்களை 90 ஆண்டுகள் குத்தகைக்கு விடுவதும் அடங்கும். மொத்தம் 6.3 ஏக்கர் நிலத்தை ஹோட்டல் அல்லது சர்வீஸ் அபார்ட்மென்ட் கட்டிக் கொள்ள அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தவிர இதே பகுதியில் மேலும் காலியாக உள்ள1.8 ஏக்கர் நிலம் வர்த்தக நோக்கத்தில் பயன்படுத்த அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹோட்டலைச் சுற்றி உள்ள பிற காலி இடங்களைத் தகுதியுள்ள நிறுவனங்களுக்கு விற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு இந்த நடவடிக்கைகள் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.