
கொல்கத்தா: கோவிட்-19 என்பதைவிட பாரதீய ஜனதாவே மிகவும் ஆபத்தான வைரஸ் என்று கடுமையாக சாடியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
“மக்களுக்கான அரசை நடத்துவதற்கு பதிலாக, சர்வாதிகார ஆட்சியை பாரதீய ஜனதா நடத்திவருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாரதீய ஜனதா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான ஒரு அரசை நடத்தி வருகிறது. கோவிட்-19 ஐ விட கொடிய வைரஸ்தான் பாரதீய ஜனதா.
மனிதாபிமானமே எனது ஜாதி என்பதால், நான் கடைசி கட்டம் வரை தலித்துகளின் பக்கம் நிற்பேன். ஜாதி & மதத்தின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை” என்றுள்ளார் அவர்.
உத்திரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் சம்பவம் நாடெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவதை தொடர்ந்து, மம்தா பானர்ஜியும் கருத்து தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel