ரேலி

த்தியில் ஆளும் பாஜகவின் மோடி அரசும் மாநிலத்தில் ஆளும் யோகியின் பாஜக அரசும் ராமர் கோவில் கட்டாததற்கு விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்து அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் தின் தலைவர் பிரவின் தொகாடியா.  தற்போது பரேலியில் உள்ள மௌராதாபாத் பகுதியில் விஸ்வ இந்து பரிஷத்  தொண்டர்களின் செயற்கூட்டம் நடைபெற்றது.   அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரவின் தொகாடியா சிறப்புரை ஆற்றினார்.

அவர் தனது உரையில், “மத்தியில் ஆளும் மோடியின் பாஜக அரசும், மாநிலத்தில் ஆளும் யோகியின் பாஜக அரசும் ராமர் கோவில் கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்தனர்.   அவர்கள் இந்த வாக்குறுதியினால் தான் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்.   ஆனால் இப்போது அதை நிறைவேற்றாமல் நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருப்பதாக  கதை சொல்கின்றனர்.

ராமர் கோவில் கட்ட தங்கள் உயிரையே தியாகம் செய்த கர சேவகர்களை இவர்கள் மறந்து விட்டனர்.     பாஜக ராமர் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி விட்டது.   அது மட்டுமின்றி  தொழில் துறையிலும்  உ. பி. யின் பாஜக அரசு ஒரு முன்னேற்றமும் புரியவில்லை.   அதனால் 20 கோடி இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.

அது மட்டுமின்றி பாஜக ஆளும் மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது.   பசுக்களுக்கு பாதுகாப்பு கிடையாது.    கடந்த 4 வருடங்களாக அண்ணன் மோடியிடம் எந்தக் கேள்வியும் நான் கேட்கவில்லை.   ஆனால் தற்போது வரை அவர் மேற்கூறிய விவகாரங்களில் எந்த நடவடிக்கையும் எழுப்பதால் இந்த கேள்விகளை எழுப்புகிறேன்” என கூறி உள்ளார்.