டில்லி,

த்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.. இதில் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச  மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் கடந்த பிப்ரவரி 4ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்தது. உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில், ஆளும் சமாஜ்வாடி 298 இடங்களிலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 105 இடங்களிலும் போட்டியிட்டன.

பா.ஜ கட்சி 384 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 403 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இன்றுவாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை எண்ணப்பட்ட இடங்களில்  பெரும்பாலான தொகுதிகளில் பாரதியஜனதா கட்சியே முன்னிலை வகித்து வருகிறது.

சுமார் 220 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது.

இதன் காரணமாக உ.பி.யி.ல் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதியாகிறது.

இதன் காரணமாக பா.ஜ.கவினர் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.