சென்னை: பெண்களை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது போலீசில் பாஜக புகார் அளித்த்துள்ளது. அதன்பேரில் சாதிக் கைது செய்யப்படுவாரா? என கேள்வி எழுந்துள்ளது.
பெண்கள்மீதான புகார், பெண்கள் மீதா அவதூறு தொடர்பான புகார் மீது தமிழகஅரசு உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், திமுக பேச்சார் சாதிக், பெண்கள் குறித்து அருவறுக்கத்தக்க வகையில் பேசியது, கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜக பெண் நிர்வாகிகளான குஷ்பு, கவுதமி, காயத்ரி ரகுராம், நமீதா குறித்து அவர் பேசிய அருவருக்கத்தக்க பேச்சு தொடர்பான வீடியோ வைரலா னது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்து பெண்கள் குறித்து திமுக எம்.பி. ராசா பேசியதும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், அதன்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இது திமுக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது திமுக பேச்சாளர் சைதை சாதிக் அருவருக்கத்தக்க வகையில் பேசியது தொடர்பாக சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த புகாரின் பேரில் சைதை சாதிக் மீது தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.