மிட்னாப்பூர்: 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுங்கள் அல்லது பதவியில் இருந்து விலகுங்கள் என்று மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குரல் எழுப்பி உள்ளார்.
மேற்கு மிட்னாபூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மமதா பானர்ஜி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது: பாஜக அரசின் அராஜகப் போக்கை தட்டிக் கேட்காமல் மவுனமாக இருப்பதை விட, கைதாகி சிறை செல்வதே மேல்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, உடனடியாக புதியதாக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறவேண்டும். இல்லையென்றால் பதவி விலக வேண்டும். விவசாயிகளின் உரிமைகளை தியாகம் செய்துவிட்டு, பாஜக பதவியில் நீடிக்கக் கூடாது என்று கூறினார்.