பெங்களுரூ:

த்திய அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல்களை மேற்கோளிட்டு, கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்ட டி.கே. சிவகுமார் நடத்தவிருந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கர்நாடக அரசு அனுமதி மறுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்ட டி.கே. சிவகுமார், தனது பதவி ஏற்பு விழாவை பெங்களூருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் எளியாக நடத்தி கொள்ள, மாநில முதலமைச்சர் எடியூரப்பாவிடம் அனுமதி கோரியிருந்தார். இந்த நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதி மறுத்துள்ளது. இதுபோன்று காங்கிரஸ் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இது மூன்றாவது முறையாகும்.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜூன் 14 அன்று, கர்நாடகா முழுவதும் 7,800 இடங்களில் ‘பிரதிஜ்னா தினம்’ நடைபெறவிருந்தது, இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கொரோனா பாதுகாப்பு முன்னேச்சரிகையுடன் இந்த தினம் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்வுக்கு மீண்டும் அனுமதியை மறுப்பதன் மூலம், பாஜக அரசு அரசியலில் செய்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் அவர் கேபிசிசி தலைவராக நியமிக்கப்பட்ட போதிலும், சிவகுமார் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தியதைத் இதுவரை பதவியேற்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.