மேற்குவங்க மாநிலத்தில் யாரும் எதிர்பார்க்க படி, அரசு பலத்துடன் 18 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி, பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 89 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் பகல் 2 மணி நிலவரப்படி,

திரினாமுல் காங்கிரஸ்: 22 தொகுதிகள்

பாஜக: 18 தொகுதிகள்

காங்கிரஸ்: 01 தொகுதி

இதர: 01 தொகுதி

இவ்வாறு முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.