பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட தலைவர் கைது செய்ப்பட்டார்.
பெரம்பலூர் பாஜக மாவட்ட துணைத்தலைவர், மற்றும் OBCஅணி மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர் லுவாங்கோ அடைக்கலராஜ். இவர் திருச்சி அருகே 2 கிலோ அபின் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
இவர் அபின் கடத்தி வந்த காரையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து, தற்போது காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.