சென்னை

பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகர காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொட்ரப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக் வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததாகவும், ஆனால் ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியின் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியதாகவும் கூறி பா.ஜ.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாஜகவின் வழக்கு மனுவில், போராட்டம் நடத்த 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறை, எந்த கட்டுப்பாடும் இல்லாமல், விண்ணப்பம் பெறாமல் ஆளுங்கட்சியினரின் போராட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் சட்ட விதிகளை மீறி செயல்பட்ட சென்னை காவல் ஆணையர் ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் உத்தரவிட வேண்டும் என பா.ஜ.க.வின் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.