டில்லி

பிஜேபி, குடியரசுத்தலைவர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது

குடியரசுத்தலைவர் வேட்பாளர் யார் என்பது இப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தியாகும்.

அதுவும் ஆளும் பிஜேபி கட்சியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் யாராக இருக்கக்கூடும் என்பது இன்னும் தெரியவில்லை.

ஊடகங்களில் பலரின் பெயரையும் அறிவித்து செய்தி வருகின்றன..

ஆனால் பிஜேபி தரப்பில் இருந்து யாரையும் உறுதி செய்யவில்லை.

இன்னிலையில் ஒரு செய்தி நிறுவனம், வேட்பாளரை தேர்ந்தெடுக்க மூவர் கொண்ட ஒரு குழுவை பி ஜே பி அமைத்து இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த குழுவில் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங்க், மற்றும் வெங்கையா நாயுடு இடம் பெற்றிருப்பதாகவும் அந்த செய்திக் குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.