டில்லி

இந்தியாவில் அதிக நன்கொடையாக ரூ 956.77 கோடிகள் வாங்கியுள்ள நிலையில் அதில் ரூ 705.81 கோடி மட்டும் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் இருந்து பெற்றுள்ளது.  மீதத் தொகை சிறு சிறு நன்கொடைகளாக பெறப்பட்டிருப்பதால் பான்கார்ட் விவரங்கள் வாங்கப்படவில்லை.

சமீபத்தில் வெளியாகி உள்ள ஒரு கணக்கெடுப்பின் படி 2012-13 லிருந்து 2015-16 வரையிலுமான ஆண்டுகளில் பா ஜ கவுக்கு நன்கொடையாக ரூ 956.77 கோடிகள் வந்துள்ளது.   இதில்  ரூ.705.81கோடி ரூபாய்கள் கார்பொரேட் கம்பெனிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.  ரூ. 20000 க்கு அதிகமாக நன்கொடை அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து பான் கார்ட் விவரங்கள் தேவைப்படும்.   ஆனால் ரூ 150 கோடிக்கும் மேல் பா ஜ க ரூ20000க்கும் குறைவாக வாங்கியதால் அந்த தொகைக்கு பான்கார்ட் விவரங்கள் தரப்படவில்லை.

இரண்டாவதாக வரும் காங்கிரஸ் கட்சி ரூ, 198.16 கோடி கார்ப்பரேட் கம்பெனிகளிடம் இருந்து பெற்றுள்ளது.  மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 18 கோடி நன்கொடையாக தரப்பட்டுள்ளது.   பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ. 20000க்கும் அதிகமாக யாரிடம் இருந்து நன்கொடை பெறவில்லை என ஆவணங்களில் உள்ளது.

மொத்தத்தில் தேசிய கட்சிகள் அனைத்துமாக சேர்ந்து ரூ.355.08 கோடி பான்கார்டு விவரங்கள் இன்றி பெற்றுள்ளன.  இதிலும் பா ஜ க ரூ. 159.59 கோடி பெற்று முதலிடத்தில் உள்ளது.