பெங்களூரு

ர்நாடக முன்னாள் அமைச்சர் டி கே சிவகுமார் கைதுக்கு வருந்துவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும் முன்னாள் கர்நாடக  அமைச்சருமான டி கே சிவகுமார் மீது பண மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. அவர் ரூ.8.5 கோடியை முறைகேடாகப் பதுக்கி வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அவரிடம் நான்கு நாட்களாக அமலாக்கத்துறையினர் விசாரணை செய்து வந்தனர். நேற்று இரவு டி கே சிவகுமாரை அமலாக்கப் பிரிவு திடீரெ என கைது செய்தது.

முன்னாள் அமைச்சர் டி கே சிவகுமார் கைதுக்குக் கர்நாடக  மாநில எதிர்க்கட்சியினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சிவகுமார் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அ சிவகுமரின்கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று இவ்விரு கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இது குறித்து தற்போதைய கர்நாடகா முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான எடியூரப்பா, “எனக்கு டி கே சிவகுமார் கைது  செய்யப்பட்டதில் சந்தோஷம் இல்லை. வருத்தமாக உள்ளது. இந்த கைது விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்துள்ளது. விரைவில் இவ்வழக்கிலிருந்து சிவகுமார் மீண்டு வர நான் இறைவனை வேண்டுகிறேன்”எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எடியூரப்பாவின் இந்த கருத்து மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடியூரப்பா தனது கருத்தின் மூலம் பாஜகவை மறைமுகமாக எதிர்ப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.