க்னோ

த்தரப்பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வரை பாஜக மத்திய தலைமை முடிவு செய்யும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  இம்மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார்   இவரது அதிரடி.நடவடிக்கைகள் காரணமாக இவரைப் பற்றி கட்சியில் இருவித அபிப்ராயங்கள் நிலவி வருகின்றன.

ஒரு சிலர் மோடிக்கு  பிறகு யோகி இந்தியாவின் அடுத்த பிரதமராகப் பதவி ஏற்பார் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.  வேறு சிலர் யோகியின் அதிரடி நடவடிக்கைகளால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமின்றி நாடெங்கும் பாஜகவின் பெருமை குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

அடுத்த வருடம் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.    இந்த தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று யோகி மீண்டும் முதல்வர் ஆகலாம் என கூறப்படுகிறது.  ஆனால் இன்று பாஜக மூத்த தலைவர் இந்த ஊகத்தை தனது அறிவிப்பின் மூலம் கேள்விக் குறி ஆக்கி உள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுவாமி பிரசாத் மவுரியா அம்மாநிலத்தில் அமைச்சராகவும் உள்ளார்.  அவர் இன்று “உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கும்.  அதன் பிறகு மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை பாஜக மத்திய தலைமை முடிவு செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு மூலம் உத்தரப்பிரதேச அடுத்த முதல்வராக யோகி ஆதித்யநாத் மீண்டும் பதவி ஏற்க மாட்டார் என்பதை மவுரியா சூசகமாக தெரிவித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.