சென்னை:
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி மாநில அரசுக்கு எதிராக பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

சட்ட விரோதமாக கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறி செயல்படல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]