டேராடூன்: உத்தரகண்ட் மாநில பாஜக தலைவராக மதன் கௌசிக் நியமிக்கப்பட்டு உள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: உத்தரகண்ட் மாநில பாஜக தலைவராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன். 2022ல் உத்தரகண்ட் மாநிலத்தில் மீண்டும் பாஜக தலைமையிலான அரசு அமையும் என உறுதி கூறுகிறேன் என்று  குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக உத்ததரகண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத், கட்சித் தலைமை கேட்டுக் கொண்டதன் பேரில் தமது பதவியை சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து உத்தரகண்ட் மாநில புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றுக் கொண்டார்.

[youtube-feed feed=1]