கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மார்ச் 14ம் தேதி வெளியிடப்படுகிறது.

மேற்குவங்க சட்டசபை தேர்தல் வரும் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக நடக்க உள்ளது. திரிணமூல், பாஜக மற்றும் காங்கிரஸ் – இடதுசாரி கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்காக கட்சிகளின் தேர்தல் அறிக்கை அனைத்து கட்சிகளின் தயாரித்து வருகின்றன. இந் நிலையில், திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வரும் 14ம் தேதி வெளியிடப்படுவதாக அக்கட்சி அறிவித்து உள்ளது.

முன்னதாக காளிகாட்டில் நேற்றைய தினம் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கால் எலும்பு முறிவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட தேதி மாற்றப்பட்டிருக்கிறது.