ஐதராபாத்: ஆந்திரப் பிரதேசம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிடவுள்ள பெரும்பான்மையான வேட்பாளர்களின் பெயர்களை பாரதீய ஜனதா அறிவித்துள்ளது.
இந்த 2 மாநில சட்ட சபைகளுக்கும், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடைபெறவுள்ளது.
மொத்தம் 175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டபை தேர்தலில், முதற்கட்டமாக 123 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மொத்தம் 60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில், முதற்கட்டமாக, 54 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேச முதல்வராக இருக்கும் பெமா கண்டு, முக்தோ தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.
ஆந்திராவில் முக்கியப் போட்டியே, சந்திரபாபு நாயுடு மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு இடையில்தான் என்றாலும், அங்கே தனது எண்ணிக்கையை கூட்டுவதற்கு பாரதீய ஜனதா முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– மதுரை மாயாண்டி