ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி, ஆகஸ்டு 15ந்தேதி அன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதேவேளையில், தோனியின் திடீர் ஓய்வு அறிவிப்புக்கு பின்னால் பாஜகவின் அரசியல் விளையாடி இருப்பதாகவும் வடமாநில தகவல்கள் தெரிவிக்கின்றன.

கங்குலியுடன் ஜெய்ஷா

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவரான மகேந்திரசிங் தோனி, கடந்த ஆண்டு (2010) டிசம்பரில் அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள மறுத்ததால், அவரை பழிவாங்கும் வகையில், கடந்த சில மாதங்களாக எந்தவொரு போட்டியிலும் கலந்துகொள்ள அனுமதி வழங்க மறுக்கப்பட்டு வந்ததும், இதற்கு பின்னணியில் பிசிசிஐ செயலாளராக இருந்து வரும் உள்துறைஅமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய்ஷாவின் கைங்கர்யம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே, தோனி ஓய்வு அறிவிப்புக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல், கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில், இந்திய தேசிய காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – ராஷ்டிரிய ஜனதா தளம் அம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது.

ஆனால்,  2019 மக்களவைத் தேர்தலில் இந்த மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 12 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 2 இடங்களிலும் வென்றன. இந்த நிலை யில், அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது,  பாஜக படுதோல்வி அடைந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.

81தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில், ஆட்சி செய்துவந்த பாஜக மாநில அரசு மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் இருந்ததால், மீண்டும் வெற்றிபெறுவது சாத்தியம் இல்லை என்பது, தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் அப்பட்டமாகவெளிப்பட்டது.

மாநிலத்தில், பாஜகவின் பலம் மோசமான நிலைக்கு சென்றிருந்ததால், பிரபலமானவரை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தி, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற நினைத்த, பாஜக தலைமை, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, தோனியை பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள பணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தோனி, எந்தவொரு கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொள்ள மாட்டேன் என திட்டவட்டமாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்,  ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதி களை கைப்பற்றியது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 16 தொகுதிகளிலும்,  ராஷ்டிரிய ஜனதா தளம் 1 தொகுதியில் வென்று, கூட்டணி ஆட்சி அமைத்தது.

கடந்த முறை ஆளும்கட்சியாக இருந்த பாஜக 25 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியை சந்தித்தது. இதனால், பாஜக தலைமை தோனி மீது கடும் கோபத்தில் இருந்து, வன்மத்தை காட்டத் தொடங்கியது.

ஏற்கனவே தோனிக்கு, ராணுவ பட்டாலியன் பதவி எல்லாம் கொடுத்து கவுரவப்படுத்திய மத்திய பாஜக அரசு, ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில், தோனி ஒத்துழைக்க மறுத்ததால், அவரது கிரிக்கெட் வாழ்வுக்கு சாவுமணி அடிக்க காய்களை நகர்த்தி வந்தது.

இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்தவொரு போட்டியிலும் ஆட, தோனியை செலக்ட் செய்ய மறுத்து வந்தது. தோனி எந்தவொரு போட்டிகளிலும் களமிறங்காதது, அவரது ரசிகர்களி டையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. ஆனால், பிசிசிஐ திட்டமிட்டே தோனியை கழற்றி விடும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

அதன் காரணமாகவே, பாஜக ஆதரவு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும், தோனி பதவி விலக வேண்டும், அவர் ஓய்வு பெற வேண்டும், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என சமூக ஊடகங்களில் அழுத்தம் கொடுத்து வந்தனர்.

இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வந்த, தோனி, ஏற்கனவே 2017ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன்சிப் பதவியில்  இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில்,  ஆகஸ்டு 15ந்தேதி  சர்வதேச போட்டிகளில் இருந்துவிலகுவதாக அறிவித்து இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றன.

அமித்ஷா – ஜெய்ஷா

பொதுவாக ஒரு ஆட்டத்தில் இருந்து வீரர் ஒருவர் ஓய்வுபெற நினைத்தால், ஆட்டத்தின் முடிவில் அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். அதுபோல, அவருக்கு சக வீரர்கள் உள்பட அனைத்து தரப்பினரும், மைதானத்திலேயே பிரமாண்டமாக வாழ்த்தி  வழியனுப்பி வைப்பது வழக்கம்.  ஆனால் தோனியின் ஓய்வு அறிவிப்போ, கொரோனா காலக்கட்டத்திலும், எந்தவொரு ஆட்டத்தில் பங்கேற்க மறுக்கப்பட்ட நிலையில், தன்னந்தனியாக ஓய்வு அறிவிப்பு வெளியிடும் நிலைக்கு பாஜகவினரால் தள்ளப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதற்கிடையில், பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோரின் பதவிக்காலம் கடந்த ஜூலை முடிந்த நிலையில்,  அவர்கள் பதவி நீட்டிப்பது தொடர்பான  வழக்கும் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதில்,  அவர்களுக்குப் பதவி நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதா அல்லது பதவியிலிருந்து விலகுவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஒருவேளை ஜெய்ஷா, கங்குலிக்கு உச்சநீதி மன்றம் பதவி நீட்டிப்பு வழங்க மறுத்தால், அவர்கள் உடனே பதவி விலக நேரிடும். அதனால், தாங்கள் பதவி விலகுவதற்கு முன்பு தோனியை அணியில் இருந்து விலக, அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே  தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து அதிரடியாக விலகுவதாக திடீரென அறிவித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தோனி மீது பாஜக தலைமை, இனிமேல், எதிர்க்கட்சி தலைவர்களை ஒடுக்க, வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறையை ஏவிவிடுவதுபோல, தோனி மீதும்  வருமான வரித்துறை, அமலாக்கத் துறையை ஏவிவிட்டு சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.