புவனேஸ்வர்:

டிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கட்சியின் தேசிய துணைத்தலைவரான ரகுநாத் மோஹந்தி  திடீரென பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இவர் பாஜகவில் இணைவார் என நம்பப்படுகிறது.

ஒடிசா மாநிலத்தில் 3 முறை ஆட்சியை பிடித்துள்ளது நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி. மாநில முதல்வராக நவீன் பட்நாயக் இருந்து வருகிறார்.அவரது தலைமையில் கட்சி ஆட்சி ஆகியவை செயல்பட்டு வருகிறது.

பிஜு ஜனதா தளம் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே நவீன் பட்நாயக்குக்கு பக்கபலமாக  இருந்த வந்தவர்  ரகுநாத் மோஹந்தி. இதையடுத்து, அவருக்கு  பிஜு ஜனதா தளம் கட்சியின் தேசிய துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இவர் மாநில மந்திரியாகவும் இருந்தாளர். இவரது மருமகள் இவர்கள் குடும்பத்தினர் மீது வரதட்சனை கொடுமை குற்றச்சாட்டு கூறியதால், 2013ம் ஆண்டு அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கபட்டார். அதையடுத்து 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன் றதேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த ரகுநாத் மொஹந்திக்கு தற்போதும் வாய்ப்பு வழங்கப்படாததால், கட்சியின்  அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மோஹந்தி, பிஜுபட்நாயக் கடைபிடித்து வந்த கொள்கைகளை, அவரது மகன் நவீன் பட்நாயக்  காற்றில் பறக்கவிட்டு விட்டார். தற்போது பிஜு ஜனதாதளம்  வர்த்தக நிறுவனம்போல் பிஜு ஜனதா தளம் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டி உள்ளார்.

மோஹந்தி, விரைவில் பாஜகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.