திருவாரூர்:
திருவாரூரில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கைக்கு எதிராக சில மாணவர்கள் பல்கலைக்கழக சுவர்கள் நோட்டீஸ் ஒட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் நோட்டீஸ் அளித்துள்ளது.

திருவாரூர் அருகே நீலக்குடி என்ற பகுதியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவமதும் உள்ள ஏராளமான மாவர்கள் படித்து வருகின்றனர். இங்க குறிப்பிட்ட அளவு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த மாணவ மாணவிகளும் படித்து வருகின்றனர்.
இந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து மத்தியஅரசு எடுத்த நடவடிக்கையை எதிர்த்து பல்கலைக்கழகத்தின் சுவர்களில் துண்டு பிரசுரம் ஒட்டியுள்ளனர். 5 மாணவிகள் உள்பட 30 மாணவ- மாணவியர்கள் காஷ்மீர் விவகாரம் குறித்து ஒன்றுகூடி பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேராசிரியர்கள் அவர்களிடம் விளக்கம் கேட்ட நிலையில், அவர்கள் பேராசிரியர்களை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்பபடுகிறது. இதையடுத்து, அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]