டில்லி
மத்திய நிதி அமைச்சர் பிட் காயின் முதலீடுகள் வருமானவரித்துறையினரால் கண்காணிக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
தற்போது உலகெங்கும் பிட் காயின் உட்பட பல கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் இதில் பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும், எந்த ஒரு நாடும் பயன் அடைவதில்லை எனவும் கூறப்படுகிறது.
இன்று பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அளித்தார். அப்போது அவர், “பிட் காயின் முதலீடு வருமான வரித்துறையால் கண்காணிக்கபடும். அத்துடன் உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க பாதுகாப்புத் துறையில் தனியார் முதலீடுகளை அரசு வரவேற்கிறது. தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் வசதிக்காக வாடிக்கையாளர்கள் தங்கத்தை எளிதாக மாற்றிக் கொள்ள வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு கிரிப்டோ கரன்சியில் தற்போது முதலீடு செய்து வரும் இளைஞர்களிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது.