
சந்தானம் நடிப்பில் தீபாவளி விருந்தாய் திரைக்கு வந்த படம் பிஸ்கோத். மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரித்திருந்தார்.
ஆனந்தராஜ், ஜீவா, நான் கடவுள் ராஜேந்திரன், சவுகார் ஜானகி, மனோகர் ஆகியோர் நடித்து அசத்தியிருந்தனர். நாயகியாக தாரா அலிஷா நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை வெளியிட்டது.
இந்நிலையில் படத்தின் பேபி பாடல் வீடியோ வெளியானது. யோகி சேகர் பாடிய இந்த பாடல் வரிகளை ரதன் எழுதியுள்ளார். நகைச்சுவை கலந்த ரொமான்ஸுடன் சந்தானம் செய்யும் செயல்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. சந்தானத்திற்கு நிகராக நடனத்தில் அசத்தியிருக்கிறார் படத்தின் நாயகி தாரா அலிஷா.
[youtube-feed feed=1]