ர்ஜினியா

மெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் தடையை மீறி தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டத்தை நடத்திய பாதிரியார் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார்.

உலகில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள அமெரிக்காவில் 10 பேருக்கு மேல் மக்கள் கூட்டமாகக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதை மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   ஆனால் அதை எல்லாம் அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் உள்ள தேவாலயத்தின் பேராயர் ஜெரால்ட் கிளென் லட்சியம் செய்யவில்லை.

ஜெரால்ட் கிளென் தொடர்ந்து தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டங்கள் நிகழ்த்தி வந்துள்ளார். அவர் மார்ச் 22 அன்று இறுதியாக எச்சரிக்கையை மீறி பிரார்த்தனை கூட்டம் நடத்தி உள்ளார்.   அந்தக் கூட்டத்தில் அவர், “கொரோனாவை விட கடவுள் மிகப் பெரியவர் என்பதை நான் நம்புகிறேன்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவரைக் குணப்படுத்தும் சக்தி தேவாலயத்துக்கு உள்ளது.

நான் கடவுளின் தூதன்.  கடவுளிடம் பேசி கொரோனா பாதிப்பைக் குறைப்பேன்.   எனவே நான் மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து அரசின் எச்சரிக்கையை மீறுவேன்.  நான் சிறை செல்லும் வரை அல்லது மருத்துவமனை செல்லும் வரை எனது தேவாலயம் மக்களுக்காகத் திறந்து இருக்கும்” எனத் தெரிவித்தார்.

நேற்று முன் தினம் தேவாலயத்தில் அவர் ஒரு வாரத்துக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக மரணம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்து துக்கம் அனுசரிக்கப்பட்டது.

அவர் மனைவி மெர்சீட்லா கிளென் என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் பிரார்த்தனையில் மக்களுடன் க்லந்துக் கொண்டுள்ளார்.

அவர்கள் மகள் மார்கேர்ரி, “எனது தந்தைக்கு ஆரம்ப அறிகுறிகள் தென்பட்ட போது அவர் அதைக் கவனத்தில் கொள்ளவில்லை.  அதனால் அவருக்கு ஜுரம் அதிகரித்து உடல் நிலை கெட்டது.  எனவே மக்கள் அனைவரும் வீட்டினுள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இது நம்மை மட்டும் அன்றி நம்மை சுற்று உள்ளவர்களையும் காக்கும் செயலாகும்” எனக் கூறி உள்ளார்.