அம்மான்
ஜோர்டான் நாட்டின் புதிய பிரதமராக பிஷர் அல் கசாவ்னே நியமிக்கப்பட்டுள்ளார்.
அரபு நாடுகளில் ஒன்றான ஜோர்டான் நாட்டில் உமர் ரசாஸ் பிரதமராக பதவி வகித்து வந்தார்.
அவர் சமீபத்தில் தனது பதவியை திடீர் என ராஜினாமா செய்தார்.
இந்த ராஜினாமாவை மன்னர் அப்துல்லா ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து பிஷர் அல் கசாவ்னே பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை மன்னர் அறிவித்துள்ளார்.
மேலும் விரைவில் அமைச்சரவையை அமைக்க பிஷருக்கு மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
பிஷர் அல் கசாவ்னே மன்னருக்கு ஆலோசகராக பணி பிரிந்தவர் ஆவார்