ரோவன்:
பொழுதுபோக்கு விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 13 பேர் பலியானார்கள். மேலும் பேர் 6 தீக்காயம் அடைந்தனர்.
பிரான்சில் உள்ள ரோவன் பகுதியில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பேர் கலந்துகொண்டனர்.

விழாவின் போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்சி இளைஞர்கள் 13 பேர் கருகி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.. காயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிறந்தநாள் விழாவில் அனைவரும் உற்சாகம இருந்தபோது எதிர்பாராத விதமாக இந்த துயர நிகழ்ச்சி நடந்துள்ளது. தீயில் கருவி உயிரிழந்தவர்கள் அனைவரும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என கூறப்படுகிறது.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். கட்டிடத்தின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் உடனடியாக அவர்களால் வெளியேற முடியவில்லை என்று தீயணைப்புத் துறையினர் கூறினர்.
Patrikai.com official YouTube Channel