ராஜஸ்தான்:
கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தற்போது புதியவகை காய்ச்சல் வட மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்தாண்டு முழுவதும் கொரோனா வைரஸால் நாடே முடங்கி போன நிலையில், தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த சூழலில் பறவை காய்ச்சல் நோய் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

இந்தப் பறவை காய்ச்சலானது ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசங்களில் பரவியுள்ளது. பறவை காய்ச்சல் காரணமாக பல இடங்களில் காகங்கள் செத்து மடிந்துள்ளன. இது குறித்து ராஜஸ்தான் முதன்மை செயலாளர் குஞ்சி லால் மீனா கூறுகையில், திடீரென ஏற்பட்டுள்ள பறவை காய்ச்சல் நோயால் பல்வேறு பகுதிகளில் காகங்கள் செத்து மடிந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட பறவைகள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.