பா.ஜ.க. ஆளும் திரிபுரா மாநிலத்தில் அதன் முதல்வராக இருக்கும் பிப்லப் குமார் தேவ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்ற போதும் நேற்று அவர் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2023 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் திரிபுரா மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. வின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் பா.ஜ.க. பொதுச் செயலாளர் வினோத் தவ்தே தலைமையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற இருக்கிறது.