சென்னை
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பயோ மெட்ரிக் வருகை பதிவு முறை அமல்படுத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக உயர்கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
”தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அலுவலர்கள் ஆகியோர் பணிக்கு தாமதமாக வருவதையும், உரிய அதிகாரியிடம் அனுமதி பெறாமல் அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
எனவே பல்கலைக்கழகங்கள் சுமுகமாக செயல்படும் வகையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் வருகையை உறுதி செய்வதற்காக பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
இந்த முறை மூலம் பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்ரும் அலுவலர்கள் ஆகியோர் பல்கலைக்கழகத்துக்குள் நுழையும்போதும், பணி முடிந்து வெளியேறும் போதும் பதிவு செய்ய வேண்டும்’
என்று உத்தரவிடப்பட்டுள்ளது.