ருப்பை (கர்ப்பப்பை) புற்றுநோயை கண்டறிய விஞ்ஞானிகள் குழு ’’பயோமார்க்கர்’’ எனும் புதிய இரத்த பரிசோதனை முறையை உருவாக்கியுள்ளனர்,  இந்த புதிய பரிசோதனையை உப்சாலா பல்கலைக்கழகம் மற்றும்  கூட்டன்பர்க் பல்கலைக்கழகத்தின்  சஹல்கிரென்ஸ்கா அகாடமி, ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்தியது.

சோதனை எப்படி வேலை செய்கிறது? பயோனக்கர் பரிசோதனை, இந்த வடிவிலான புற்று நோயைக் கொண்டு பெண்களை ஆளக்கூடிய 11 புரதங்களை ஆராயும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும்  இரத்தபரிசோதனையிலும் நடத்தப்படுகிறது.  மேலும்  அல்ட்ராசவுண்ட் வழியாகவும் இப்புற்றுநோய்களை கண்டறிய முடியும்.

பொதுவாக  கர்ப்பப்பை புற்றுநோய் வெகு தாமதமாகவே கண்டறியப்படுகிறது அவற்றில் 10ல் நான்கு பேர் மட்டும் சிகிச்சை மூலம் தங்கள் வாழ்வினை நீடித்துக்கொள்கிறார்கள், அதுவும் 5 வருடங்களுக்கு மட்டுமே. இந்த நோயை கண்டறிய தனியாக ஏதும் சோதனை கிடையாது. சந்தேகத்தின் அடிப்படையில்தான்  அல்ட்ராசவுண்ட் வழியாக பரிசோதனை செய்யப்படுகிறத. இந்த பரிசோதனையில் புற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் அவர்களுக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாக காணப்படுகிறது

’’ அறுவைசிகிச்சைக்கு முந்தைய நோயறிதல்களை நாம் இன்னும் துல்லியமாக உருவாக்க வேண்டும். ஒரு புற்றுநோயைக் கண்டறிய,  அல்ட்ராசவுண்ட் மூலமே புற்றுநோய் என சந்தேகிக்கப்படும் இந்த முறையை காட்டிலும் அறுவை சிகிச்சை தேவையில்லாத இந்த எளிய இரத்த பரிசோதனைக்கு அதிக தேவை உள்ளது, ”என்று கோதன்பர்க் பல்கலைக்கழகத்தின் சஹல்கிரென்ஸ்கா அகாடமியில் உள்ள மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் துறையின் பேராசிரியரும் மூத்த ஆலோசகருமான கரின் சுண்ட்பெல்ட் செய்தியாளர்களிடம் கூறினார்.

-செல்வமுரளி