‘தல’ அஜித் நடித்த ‘பில்லா’ திரைப்படத்தை குறிப்பிட்டு “அன்றே கணித்த அஜித்” எனும் வார்த்தைகள் தற்போது வைரலாகி வருகின்றன. அஜீத் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கிய திரைப்படம் பில்லா.

இந்த படத்தில் மலேசியாவில் வாழும் அஜித், மலேசிய முருகன் கோவிலுக்கு முன்பாக “சேவல் கொடி பறக்குதடா” எனும் பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார்.

இந்த *பாடலில் பாடலாசிரியர் பா.விஜய் “”தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்+கு! வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு?”” என்கிற வரிகளை எழுதி இருப்பார். இந்த வரிகள்தான் தற்போது “அன்றே கணித்த அஜித்” என்று வைரல் ஆகி வருகிறது.

தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.