வாஷிங்ட்ன்

பில் கேட்ஸ் மகள் ஜெனிபர் கேட்ஸ்  தமது இஸ்லாமியக் காதலருடன் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதை அறிவித்ததற்கு பில் கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டாவின் மகள் ஜெனிபர் கேட்ஸ்.

இவர் எகிப்து நாட்டை சேர்ந்த குதிரை ஏற்ற வீரரான நயல் நாசர் என்னும் இஸ்லாமியரைக் காதலித்து வந்தார்.

சுமார் 3 நாட்களுக்கு முன்பு ஜெனிபர் கேட்ஸ் தனது காதலர் நயல் நாசருடன் தமக்கு நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக இண்ஸ்டாகிராமில் பதிந்தார்.

இந்தப் பதிவில் அவர் தனது காதலர் நயல் நாசருடன் தாம் இருக்கும் புகைப்படத்தையும் பதிந்தார்.

ஜெனிபர் கேட்ஸ் பதிவுக்குப் பலரும் விருப்பம் தெரிவித்து வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்.

ஜெனிபர் கேட்ஸ் தந்தை பில் கேட்ஸ் மற்றும் தாய் மெலிண்டா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நயல் நாசர்  சிகாகோவில் பிறந்தவர்.

குவைத்தில் வளர்ந்த இவர் வரும் 2020 ஒலிம்பிக்கில் குதிரை ஏற்ற போட்டியில் பங்கேற்கிறார்.