பாட்னா:

பீகாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிந்துள்ளார். மருத்துவமனையின் அலட்சியம் காரணமாகவே அந்த பெண் உயரிழந்துள்ளதாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கடந்த 18-ம் தேதி இரவு பீகார் மாநிலம் சகார்சா மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனையில்  அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது மின்சாரம் பாதிக்கப்பட்டதால், டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டிருந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர், மருத்துவமனையின் அலட்சியம் காரணமாகவே அறுவை சிகிச்சை செய்த பெண் இறந்துவிட்டார் என்று மருத்துவமனை மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

[youtube-feed feed=1]