பாட்னா:  பீகாரில்  11,000 பேர்  ‘கண்டுபிடிக்க முடியாத’ வாக்காளர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்தாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவர்கள்,  அகதி களாக வந்த வங்கதேசிகள் அல்லது ரோஹிங்கியாக்களாக இருக்கலாம்’ என நம்பப்படுகிறது.

பிஹாரில் எதிர்வரும் சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடந்து வருகிறது.  அங்கு, அகதிகளாக வந்த வங்கதேசத்தினர், உள்பட வெளிநாடுகளைச் சேர்ந்த அகதிகள் போலியாக வாக்காளர் அட்டை பெற்று வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுபோன்ற வாக்காளர்களை நீக்கும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக இறங்கி உள்ளது.

தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கூற்றுப்படி, மொத்த வாக்காளர்களில் 5.3% பேர் அதாவது,  கிட்டத்தட்ட 41.6 லட்சம் வாக்காளர்கள், அவர்களின் முகவரி களில் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், முதற்கட்டமாக பீகாரில் சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றன. ஆதார், வோட்டர் ஐடி, ரேசன் கார்டுகளை நம்பாமல், அவர்களின் குடியுரிமை சான்டிறிதழை கேட்டு பெற்று அதன்மூலம் அவர்களின் வாக்குறுரிமை உறுதி செய்யப்படுகிறது.

இந்த ஆய்வு பணி இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது. அதனால் சம்பந்தப்பட்டவர்கள், அதற்குரிய ஆவங்களை சமர்ப்பித்து வாக்காளர் அட்டையை புதுப்பித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  இதுவரை  11,000 பேரை கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்கள்  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக  என தேர்தல் ஆணையம்  தெரிவித்துளள்து.   கணக்கீட்டு படிவங்களை நிரப்ப இன்னும் ஆறு நாட்கள் உள்ள நிலையில், மீதமுள்ள கிட்டத்தட்ட 32 லட்சம் வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்கள் குறிப்பிட்ட முகவரியில் இல்லை என்பதுடன் அவர்கள் அங்கு வசித்ததாக அண்டை வீட்டாராலும் உறுதி செய்யப்படவில்லை. சில சந்தர்ப்பங்களில், அந்த முகவரிகளில் எந்த வீடும் அல்லது குடியிருப்பும் இல்லை. அவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக (வங்கதேசத்தினர் அல்லது ரோஹிங்கியாக்கள்) அண்டை மாநிலங்களில் வசித்து வந்திருக்கலாம், எப்படியோ பிஹாரில் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருக்கலாம்.

வாக்​காளர் பட்​டியலில் சுருக்​கத் திருத்​தப் பணி மேற்​கொள்​ளும்​போது தேவை​யான சோதனை​கள் இல்​லாத​தாலோ அல்​லது முறை​கே​டான வழி​யிலோ அவர்​களின் பெயர் நீக்​கப்​ப​டா​மல் இருந்​திருக்​கலாம். இது தேர்​தலின்​போது கள்ள வாக்​கு​கள் பதி​வாகும் அபா​யத்தை ஏற்​படுத்​துகிறது” என்​றார்.

பிஹாரில் 3 முறை கட்​டாய பரிசோதனைக்கு பிறகும் 41.6 லட்​சம் வாக்​காளர்​கள் (மொத்த வாக்​காளர்​களில் 5.3% பேர்) அவர்​களின் முகவரி​களில் காணப்​பட​வில்​லை.

இவர்​களில் 14.3 லட்​சம் (1.8%) பேர் இறந்​திருக்​கலாம் எனவும் 19.7 லட்​சம் பேர் அல்​லது 2.5% பேர் நிரந்​தர​மாக இடம் மாறி​யிருக்​கலாம் எனவும் நம்​பப்​படு​கிறது. 7.5 லட்​சம் அல்​லது 0.9% பேர் ஒன்​றுக்​கும் மேற்​பட்ட இடங்​களை சேர்ந்​தவர்​கள் என கண்​டறியப்​பட்ட நிலை​யில் 11,000 பேரை முற்​றி​லும் கண்​டு​பிடிக்க முடிய​வில்​லை.

 “இறந்த வாக்​காளர்​களை பட்​டியலில் இருந்து நீக்​காமல் இருப்​பதும் கள்ள வாக்​கு​களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்​து​விடும்.  முகவரி​யில் காணப்​ப​டாத வாக்​காளர்​கள் எண்​ணிக்​கை, சில தொகு​தி​களில் வேட்​பாளர்​களின் வெற்​றிக்​கான வாக்கு வித்​தி​யாசத்தை விட அதி​க​மாக இருக்​கலாம். எனவே இது​போன்ற முரண்​பாடு​களை கண்​டறிந்து களைவதற்கு வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி அவசி​ய​மாகிறது’’ என்​றார்.

பிஹாரின் 7.9 கோடி வாக்​காளர்​களில் கிட்​டத்​தட்ட 96% பேர் தங்​கள் சேர்க்கை படிவங்​களை சமர்ப்​பித்​துள்​ளனர். இது​வரை பெறப்​பட்ட 90.6% வாக்காளர் படிவங்​களில் கிட்​டத்​தட்​ட 88.2% டிஜிட்​டல்​ மயமாக்​கப்​பட்​டுள்​ளன.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கூற்றுப்படி, மொத்த வாக்காளர்களில் 5.3% பேர், BLO-க்கள் மூன்று முறை கட்டாய வருகைகள் செய்தபோதிலும், கிட்டத்தட்ட 41.6 லட்சம் வாக்காளர்கள், அவர்களின் முகவரிகளில் காணப்படவில்லை.

இவர்களில் 14.3 லட்சம் (1.8%) பேர் இறந்திருக்கலாம் என நம்பப்படும் வாக்காளர்கள், 19.7 லட்சம் பேர் அல்லது 2.5% பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள், 7.5 லட்சம் பேர் அல்லது 0.9% பேர் பல இடங்களில் சேர்ந்த வாக்காளர்கள் மற்றும் 11,000 ‘கண்டுபிடிக்க முடியாத’ வாக்காளர்கள் அடங்குவர்.

பீகாரின் 7.9 கோடி வாக்காளர்களில் கிட்டத்தட்ட 96% பேர் தங்கள் சேர்க்கை படிவங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இதுவரை பெறப்பட்ட 90.6% வாக்காளர் படிவங்களில் கிட்டத்தட்ட 88.2% பேர் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் யாரும் விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய, ஒவ்வொரு வாக்காளரையும் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவதற்கு இன்னும் ஆறு நாட்கள் உள்ள நிலையில், மீதமுள்ள கிட்டத்தட்ட 32 லட்சம் வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே மூன்று சுற்றுகளுக்கு மேல் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.

முழு தேர்தல் இயந்திரத்தின் ஒருங்கிணைந்த முயற்சியுடன், சாவடி நிலை அதிகாரிகளின் மற்றொரு சுற்று வருகையும் மீதமுள்ள வாக்காளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தத் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.