பாட்னா:

டிவி சீரியல் பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில், மகள்களுக்கு விஷத்தை கொடுத்து தாயும் தற்கொலை செய்து கொண்டார்.


பீகார் மாநிலம் ரோட்டாஸ் மாவட்டம் கராகர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காண்டி தேவி.
இவருக்கு 2 மகள்கள் இடையில் சீரியல் பார்ப்பதற்காக சானலை மாற்றும்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று இருவருக்கும் சீரியல் பார்ப்பதில் மோதல் ஏற்பட, தாய் காண்டி தேவியால் சமாளிக்க முடியவில்லை. இரு மகள்களுக்கும் விஷத்தை கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்தினார்.

இதில் தாயும் ஒரு மகளும் பரிதாபமாக இறந்தனர். மற்றொரு மகளை தீவிர சிகிச்சை அளித்து டாக்டர்கள் காப்பாற்றினர்.

முதலில் குடும்பத் தகராறு என்று தான் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்குப் பிறகுதான் டிவி சீரியலுக்காக 2 உயிர்கள் பலியானது தெரியவந்தது.

 

[youtube-feed feed=1]