பாட்னா: கொரோனா 2வது அலையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், பீகார் மாநிலத்தில் முழு ஊரடங்கு வரும் 15ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று முதலல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு மூணரை லட்சத்தை தாண்டியுள்ளது. பீகார் மாநிலத்திலும் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கவே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு, சில புதிய கட்டுப்பாடுகளை அமலில் உள்ளன.
இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து, நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, மே 15 வரை முழு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். ஊரடங்கு தொடர்பைன விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் தொடர்பாக, இன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.