பாட்னா

பெற்றோரை கவனிக்காத மகன் மற்றும் மகளுக்கு தண்டனை விதிக்க பீகார் அரசு சட்டம் இயற்ற உள்ளது.

உலகெங்கும் பல முதியோர்கள் வறுமையிலும் தனிமையிலும் வாடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோரின் கவனமின்மையே ஆகும். இதில் வசதி படைந்த முதியோர்கள் தங்களுக்கு என உள்ள இல்லங்களில் பணம் செலுத்தி தங்கி விடுகின்றனர்.

ஆனால் வறுமையில் வாடும் பல முதியவர்கள் இத்தகைய இல்லங்களில் சேர வசதி இல்ல்லாமல் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு மகன் அல்லது மகள் உள்ளதால்  அரசு அமைத்துள்ள ஆதரவற்றோர் இல்லத்திலும் சேர சட்டம் இடம் அளிப்பதில்லை.

இது குறித்து பீகார் அமைச்சரவை ஒரு தீர்மானம் இயற்றி உள்ளது. இந்த தீர்மானத்தில், “வயது முதிர்ந்த பெற்றோரை ஆதரவின்றி கைவிடும் மகன் மற்றும் மகள் ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட உள்ளது. இந்த தண்டனை சிறை தனடனை, மற்றும் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்ததாக இருக்கும்” என கூறப்பட்டுள்ளது.