பாட்னா: அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள பிகார் மாநிலத்தில் கடந்த 8 மாதங்களாக ஒரு கும்பர் போலி போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த கும்பலைச் சேர்ந்த 5 பேரை உண்மையான காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலத்தின் மாவட்டத்தின் தலைமையகத்தில்,  போலீசுக்கே தெரியாமல் கடந்த 8 மாதங்களாக  போலி போலீஸ் ஸ்டேஷன் ஒன்று நடைபெற்று வந்துள்ளது. இங்கு பணியாற்றி வந்த போலி போலீசார் நாட்டு துப்பாக்கிகளை வைத்து, அசத்தலாக பணியாற்றி வந்துள்ளனர். இந்த போலி போலீஸ் கும்பல் பல பகுதிகளில் அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி பணம் சம்பாதித்து வந்தது தெரிய வந்தது தெரிய வந்துள்ளது. இந்த கும்பலிடம் ஒருவர் பணம் கொடுத்து வேலைக்கு சேர்ந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், போலி போலீஸ் கும்பம் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதையடுத்து விசாரணை நடத்திய உண்மையான போலீசார், பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் போலி காவல்நிலையம் ஒன்று நீண்ட நாட்களாக செயல்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.  அங்குள்ள  விருந்தினர் மாளிகை அருகே ஒரு வாடகை வீட்டில் கடந்த 8 மாதங்களாக போலி காவல்நிலையம் செயல்பட்டு வந்துள்ளது. காவல்நிலையத்தில் சுமார் 5 பேர் அதிகாரிகள் உடையில் தங்களது பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்களில் இன்ஸ்பெக்டர் உடையில் இருந்த பெண் தன்னை அனிதா தேவி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் நாட்டுத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். இந்த காவல்நிலையத்தில், ரமேஷ்குமார் என்பவர் எழுத்தராக பணியாற்றி வந்துள்ளார்.  கான்பூரைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவர் ஆவணங்களுடன் காவலர் சிருடையில் பணியாற்றி வந்துள்ளார்.  இவர்கள் 5 பேரையும் கூண்டோடு கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து, காவலர் சீருடைகள், பேட்ஜ்கள், நாட்டுத்துப்பாக்கி. ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

அதன்பிறகே, அந்த காவல்நிலையம் போலியானது என்று அந்த பகுதி மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்த போலி போலீசாருக்கு  தினந்தோறும் 500 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.  மேலும் நடத்தப்பட்ட  விசாரணையில்,  தங்களை போலா யாதவ் என்பவர் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தியதாகக் கூறியுள்ளனர். இவர்களில் ஆகாஷ் என்பவர் தான் போலா யாதவிடம் 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்ததாகக் கூறியுள்ளார்.

இவர்களுக்கு பாட்னா ஸ்கார்ட் டீம் என பெயர் வைக்கப்பட்டு உள்ளதும், எங்கெல்லாம்  கட்டுமானங்கள் கட்டப்படுகிறதோ அங்கு சென்று விசாரணை நடத்தி பணம் வசூலிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.  மேலும், சிறு வியாபாரிகள், கடை நடத்துபவர்கள் உள்ளிட்டோரிடமும் தினந்தோறும் மாமூல் பெற்று வந்துள்ளது தெரியவந்துள்ளது.

போலீசுக்கேத் தெரியாமல் மாவட்டத்தின் முக்கிய பகுதியில் கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  இந்த கும்பலை உருவாக்கிய முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.