பாட்னா: பீகாரில் 3வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலில் 56 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் சட்டசபைக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி  முதல் மற்றும் 2ம் கட்ட தேர்தல் முறையே அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 3 ஆகிய நாட்களில் நடந்தது.

முதற்கட்ட தேர்தலில் 55.69 சதவீதமும், 94 உறுப்பினர்களுக்கான 2வது கட்ட தேர்தலில் 53.51 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இந் நிலையில், 78 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்ற இறுதி கட்ட வாக்குபதிவில் 3 மணி நிலவரப்படி 45.85% வாக்குகள் பதிவாகி இருந்தன.

பின்னர் மாலை 5 மணி நிலவரப்படி 55.22% வாக்குகள் பதிவானதாக தேர்தல்  ஆணையம் தெரிவித்து உள்ளது. மாலை 6 மணியுடன் முடிந்த வாக்குப்பதிவில், 56.02% வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.