டில்லி,

ன்று நள்ளிரவு பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கும் ஜஎஸ்டி அறிமுக விழா கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் புறக்கணித்துள்ளார்.

இவர், ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் பாரதியஜனதா வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக கூறி யிருந்தார். இந்நிலையில் ஜிஎஸ்டி விழாவை புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜி.எஸ்.டி. அறிமுக விழாவுக்காக  பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று நள்ளிரவு கூடுகிறது. இன்று நள்ளிரவு 10.45 மணி முதல் 12.10 மணி வரை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, இந்தியாவில்  மேற்கொள்ளப்படும் முக்கிய வரி சீர்திருத்த மாக ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை கருதப்படுகிறது.

இன்று நள்ளிரவு நடைபெற இருக்கும் சிறப்பு கூட்டத்தில் இரு சபைகளின் எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி உரை நிகழ்த்துகிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத்அன்சாரி, பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய மந்திரிகள் மற்றும் சில மாநில முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஏற்கனவே காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ்,  திமுக உள்பட 17  எதிர்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், தற்போது  பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்கமாட்டர் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் பீகார் அமைச்சர் விஜேந்திர யாதவ் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் நிதிஷ் பாரதியஜனதாவுக்கு தெரிவித்த ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்று லல்லு உள்பட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வரும் வேளையில், ஜிஎஸ்டி விழாவை நிதிஷ் புறக்கணித்திருப்பது டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.