பாட்னா

பீகார் மாநில பாஜகவின் சட்டமேலவை உறுப்பினர் சுனில்குமார் சிங் நேற்று பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் உயிர் இழந்தார்.

பீகார் மாநில சட்டமேலவையில் தர்பங்கா தொகுதியைச் சேர்ந்த சுனில்குமார் சிங் உறுப்பினராக உள்ளார்.  அவருக்குக் கடந்த ஜூலை 13 அன்று உடல் நிலை சீர் கெட்டதால் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.    அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.

அவருக்கு அதிக ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பாதிப்பும் இருந்தது  அவருக்கு மூச்சுத் திணறல் அதிகரித்ததால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.    அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.  பீகார் சட்டப்பேரவை உறுப்பினர்களில் இவர் கொரோனாவால் மரணம் அடைந்த முதல் உறுப்பினர் ஆவார்.

சுனில்குமார் சிங் மறைவுக்குப் பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், பீகார் சட்டப்பேரவை தலைவர் அவதெஷ் நாராயண சிங் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.   அத்துடன் முதல்வர் நிதிஷ் குமார் மரணமடைந்த சிங் மகன சுஜீத் குமாருடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கலை தெரிவித்துள்ளார்.