திண்டுக்கல்: பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக திண்டுக்கல்லில் காங்கிரஸ் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ள பீகார் சட்டமன்ற தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள ஆளும் கட்சிக பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றார்.
மேலும், எச்.வசந்தகுமார் மறைவால் காலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில் வசந்தகுமாரின் பணிகளால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றார்.
தமிழகத்தை ஆட்சி செய்யும் ஓபிஎஸ் இபிஎஸ் பிரதமர் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் ஆட்டுவிப்பதற்கு ஏற்பட ஆடுகின்றனர், மோடிக்கு, சமானியர்கள் பற்றியும் அவர்கள் படும் சிரமங்கள் பற்றியும் கவலை இல்லை. ஆதானி அம்பானி பற்றி தான் கவலை என்று சாடியவர், மத்தியஅரசு புதியதாக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என்று குற்றம் சாட்டியதுடன், புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்தால் வெங்காயம் மட்டுமில்ல மற்ற காய்கறிகளின் விலை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.