பீகாரில் அக்டோபர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த மாநில முதல்-அமைச்சரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ்குமார், பிரதான எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. கட்சியை கரைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
கடந்த இரு வாரங்களில் மட்டும் ஆர்.ஜே.டி.கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து விலகி, ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்து விட்டனர்.
இந்த நிலையில் , லாலு கட்சியின் எம்.எல்.ஏ. பிரேந்திர குமார் என்பவர் நேற்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியில், தன்னை ஐக்கிய படுத்திக்கொண்டார்.
இன்னொரு பலத்த அடியாக , ஆர்.ஜே.டி. கூட்டணியில் இதுவரை இடம் பெற்றிருந்த பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜிதன்ரம் மஞ்சி, நிதீஷ்குமாருடன் கை கோர்க்க முடிவு செய்துள்ளார்.
மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா என்ற கட்சி, அண்மையில் ஆர்.ஜே.டி. கூட்டணியில் இருந்து விலகியது.
நாளைய தினம்,, நிதீஷ்குமாரை சந்திக்கும் மஞ்சி, முறைப்படி, ஆளும் கட்சி கூட்டணியில் இணையும் அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளார்.
-பா.பாரதி.